இலங்கை – நியூசிலாந்து கிரிக்கெட் போட்டி- நுழைவுச்சீட்டு விபரம் அறிவிப்பு..!

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வது தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன

இதன்படி, www.srilankacricket.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக நுழைவுச்சீட்டுக்களை இணையத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், RDICS இன் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரி20 போட்டி நாட்களில் RDICS இன் பிரதான வாயில் அருகே சிறப்பு நுழைவுச்சீட்டு பெறும் கருமபீடம் திறக்கப்படும்.

மேலும், பல்லேகலையில் உள்ள PICS நுழைவுச்சீட்டு கருமபீடம் நவம்பர் 15 முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.