இலங்கை ஆசிரியர் கல்வி சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான தெரிவு செய்யப்பட்ட பரீட்சார்த்திகள் சங்க பிரதிநிதிகளை சந்தித்த பிரதமர்.
கல்வி விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப விடயதான அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும்
இலங்கை ஆசிரியர் கல்வி சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான தெரிவு செய்யப்பட்ட பரீட்சார்த்திகள் ஒன்றியத்தின்
பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (31) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது ஆசிரியர் நியமனம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து சங்கத்தின் பிரதிநிதிகள் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இது தொடர்பில் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதன்போது தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் வணக்கத்திற்குரிய உலஹிட்டியாவே விபாவி தேரர், பிரதமர் அலுவலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் நளினி கொஹவல, பிரதமரின் தனிப்பட்ட செயலாளர் விஷாகா அபேரத்ன உட்பட
இலங்கை ஆசிரியர் கல்வி சேவையின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான தெரிவு செய்யப்பட்ட பரீட்சார்த்திகள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.