இலங்கைக்கான ஒஸ்ட்ரியா தூதுவர் Katharina Wieser அவர்கள், கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார். இலங்கை மற்றும் ஒஸ்ட்ரியா நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக நிலவும் நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
தூதுவர் மற்றும் பிரதமருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர, பொருளாதார மற்றும் கலாசார தொடர்புகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை அரசை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன மற்றும் ஐரோப்பிய, வட அமெரிக்காவுக்கான பணிப்பாளர் ச்சதுர பெரேரா உள்ளிட்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.