தொழில் முனைவோர் அரச எண்ணக்கருவே சிறந்த தெரிவு

நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமாயின் தொழில் முனைவோர் அரச எண்ணக்கரு நடைமுறைப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என சர்வஜன அதிகாரத்தின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்ட பொதுக் கூட்டத் தொடரின் மற்றுமொரு கூட்டம் நேற்று (24) பிற்பகல் நிட்டம்புவயில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“இந்த நாட்டின் அரசியல் மிகவும் குழப்பமாக உள்ள நேரத்திலேயே சர்வஜன அதிகாரம் அரசியலுக்கு வந்துள்ளது.

இந்த நாட்டின் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய ஒரு நாட்டை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை  சர்வஜன அதிகாரத்திற்கு உள்ளது.

அதற்கான வழியாக, இந்தியா உட்பட உலகின் அனைத்து வளர்ந்த நாடுகளுக்கும் தொழில்முனைவோர் பின்பற்றியுள்ள தொழில்முனைவோர் எண்ணக்கருவாகும். இதுதான் ஒரே தீர்வு.

இதனால் எனக்கு பௌதீக ரீதியாக எதுவும் கிடைக்காது என்பது உங்களுக்குத் தெரியும்.

 3% பெற்றவர்களுக்கு 43% கிடைத்தமை எதிர்கட்சி வேடிக்கை பார்த்ததால் ஆகும். 

அவர்கள் பேருந்துகளை செலுத்துயும் ஜப்பானிய மொழி பேசியும், பியானோ வாசித்துக்கொண்டிருந்தனர். இதனால் தான் அது நடந்தது.

இப்போது தோழர் அநுர குமாரவின் அரசாங்கத்தை 43% பேர் அங்கீகரித்துள்ளனர்.

துணிச்சலான எதிர்க்கட்சியாக, சர்வஜன அதிகாரத்தை ஆக்க வாக்களிக்குமாறு கோருகின்றோமே தவிர அரசாங்கத்தை கவிழ்க அல்ல.

ஒரு நல்ல ஜனநாயக நாட்டில் உகந்த எதிர்க்கட்சியை உருவாக்க வேண்டும்.

இந்த நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் விடயங்களை எவ்வாறு தடுப்பது மற்றும் நல்ல விடயங்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றி நாங்கள் பேச விரும்புகிறோம் எதிர்கட்சியாக.

உங்களுக்காக உரையாற்றவே இந்த வாக்கைக் கேட்கிறோம்” என்றார்.