பசறை டெமேரியா ஏ தோட்டத்தில் முதலாம் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 6 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
46,40,64,55 வயதுடைய நான்கு பெண்களும் 46,51 வயதுடைய இரண்டு ஆண்களுமே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்.
டெமேரியா ஏ முதலாம் பிரிவில் இன்று காலையில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த வேளையில் குளவி கூடு ஒன்று கலைந்து இவர்களை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது ஆறு பேரும் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
ராமு தனராஜா