துணிச்சலான எதிர்க்கட்சி வேண்டும் திலித்!

துணிச்சலான எதிர்க்கட்சி ஒன்றினால் மட்டுமே ஆளும் அரசாங்கத்தை சரியான பாதையில் இட்டுச் செல்ல முடியும் என சர்வஜன அதிகாரத்தின் தலைவர் தொழில் முனைவோர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“துணிச்சலான  எதிர்கட்சியால்தான் ஆளும் அரசை சரியான பாதையில் இட்டுச் செல்ல முடியும், பலவீனமான எதிர்க்கட்சி வந்தால், அரசாங்கம் எதை செய்தாலும் அதற்கு கையை தூக்குவார்கள்.

ஆட்சியில் இருக்கும் அரசுக்கு வாய்ப்பு அளிக்க விரும்புகிறோம். அதுதான் எங்களின் நேர்மையான முயற்சி. ஆனால் அவர்கள் தங்கள் திட்டத்தில் நமது நாட்டின் ஒற்றுமையையும் தேசியத்தையும் பாதிக்கும் ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளனர். அந்த முன்மொழிவின் உள்ளடக்கங்களை ஒருபோதும் ஏற்க நாங்கள் தயாராக இல்லை”