இன்று 8 ரயில் சேவைகள் இரத்து !

இன்று (07) ரயில் லொக்கோமோட்டிவ் (Locomotive) இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு காரணமாக’, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 8 ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் லொக்கோமோட்டிவ் இயந்திர பொறியியலாளர்கள் சங்க சாரதிகள் நேற்று (06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.