நாட்டில்; ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக மேலதிக இராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கேணல் சஞ்சீவ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அனர்த்த நிலைமைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (14) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எந்தவொரு அனர்த்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள 6500 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் நாடளாவிய ரீதியில் தேவையான இடங்களில் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் , கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அவசர நிலையின்போது பயன்படுத்துவதற்காக வாகனங்கள்; மற்றும் படகுகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.