பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் நிவாரண குழுக்கள்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் கடற்படையின் 10 நிவாரணக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான அனைத்து படகுகளும், தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

மின்சார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க கடற்படை தயாராக உள்ளது.

மேலும், மேற்கு கடற்படை கட்டளையில் 22 அனர்த்த் நிவாரண குழுக்களும், தெற்கு கடற்படை கட்டளையில் 09 குழுக்களும் மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளையில் 17 அனர்த்த் நிவாரண குழுக்கள் என்ற வகையில் 48 அனர்த்த் நிவாரண குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும்; தெரிவித்தார்.