யாழ் புங்குடுத்தீவு பகுதிக்கு கனடிய தூதுவர் அங்கு விஜயத்தை மேற்கொண்டிருந்த பொழுது அங்குள்ள மக்களைச் சந்தித்து அந்த தீவகத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைப் பற்றி கேட்டறிந்தார்.
இந்த மக்கள் சந்திப்பின்போது சிவில் சமூகம் . மீனவ சமூகம் இந்த தீவகத்தின் பெண்கள் வலய அமைப்பு மற்றும் ‘மெசிடோ’ நிறுவனத்தின் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தற்பொழுது உள்ள அரசியல் மற்றும் தீவக மக்களாகிய தாங்கள் நீண்டகாலமாக இங்கு எதிர்நோக்கி வரும் பிரச்சனைகள் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டபோது கனடிய தூதுவர் இவர்களின் கருத்துக்களை மிகவும் ஆர்வமாக கேட்டறிந்ததாக இதில் கலந்து கொண்ட மெசிடோ நிறுவனத்தின் வட பகுதி இணைப்பாளர் யாட்சன் பிகிராடோ இவ்வாறு தெரிவித்தார்.
கனடிய தூதுவரின் இச் சந்திப்பானது சனிக்கிழமை (12) இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
(வாஸ் கூஞ்ஞ)