கொழும்பு மாவட்டம் உட்பட பல மாவட்டங்களுக்கான வேட்புமனுக்களை சர்வஜன அதிகாரம் நேற்று (10) தாக்கல் செய்தது.
தாயக மக்கள் கட்சியின் தலைவரும், தொழில் முனைவோருமான திலித் ஜயவீர கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் நேற்று கையொப்பமிட்டுள்ளார்.
அதேபோல், தாயக மக்கள் கட்சியின் உப தலைவர் பேராசிரியர் சன்ன ஜயசுமண மற்றும் கம்பஹா மாவட்ட தலைவர் மிலன் ஜயதிலக ஆகியோரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கையொப்பமிட்டனர்.
அத்துடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க தலைமையிலான சர்வஜன அதிகாரத்தின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் குழுவும் வேட்புமனுவில் நேற்று கையொப்பமிட்டுள்ளது.
சர்வஜன அதிகார காலி மாவட்ட வேட்பாளர் குழுவில் தொழில்முனைவோரான சந்திரலால் அபேகுணவர்தனவும் இணைந்துள்ளார்.