இராணுவத் தளபதியின் இராணுவ தினச் செய்தி..!

நல்லிணக்க நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கும், நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பதற்கும் தீவிரமாக பங்களிக்கும் அதேவேளை, தேசத்தைப் பாதுகாப்பதில் இலங்கைப் படையினர் தொழில் ரீதியாகவும் செயற்பாட்டில் இருக்க வேண்டும் என இராணுவத் தளபதி தனது 75ஆவது இராணுவ தினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தளபதியின் இராணுவ தின முழு செய்தி பின்வருமாறு:

தேசத்தின் பாதுகாவலராக இலங்கை இராணுவம் 2024 ஒக்டோபர் மாதம் 10 ம் திகதி அபிமானமிக்க 75 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இவ்வேளையில் இராணுவ தளபதியாக எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவிக்க முடிந்தமையை பெரும் பாக்கியமாக கருதுகிறோன்.

1949 ஒக்டோபர் மாதம் 10ம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை இராணுவமானது அன்றிலிருந்து இன்று வரை தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தனது கடமையினை சிறப்பாக செய்தமையானது நம் அனைவருக்கும் பெருமிதம் கொள்வதற்கான விடயமாகும்.

தற்போது இலங்கை இராணுவித்தினை தேசத்திற்காய் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புக்கள் மற்றும் கடமைகளுக்காக வழிகாட்டல்களை வழங்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் ஆயுத படைகளின் சேனாதிபதியுமான கௌரவ அனுர குமார திஸாநாயக்க அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவிக்கின்றேன். அத்தோடு பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா (ஓய்வு) அவர்களுக்கும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோரையும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியுடன் நிறைவு கூர்கின்றேன்.

கடந்த 75 வருடங்களாக தேசத்தை பாதுகாக்கும் பொருட்டு உயிர்தியாகம் செய்த வீரமிகு வீர்ர்கள் மற்றும் முழுமையாக ஊனமுற்ற சகல வீர்ர்களுக்கும் இந்த விஷேடமான ஆண்டு நிறைவு தினத்தில் கௌரவங்களை செலுத்தல் கட்டாய கடமையாகும். அத்தோடு நாட்டின் ஒருமைப்பாடு அமைதி மற்றும் சுகந்திரத்தை நிலை நாட்டுவதற்காக எல்லா வகையிலும் தியாகங்கள் மற்றும் ஒத்துழைப்புக்களை வழங்கிய சகலருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன். இலங்கை இராணுவத்தின் பொறுப்புக்களை வினைத்திறனாக நிறைவேற்றி கௌரவம் கீர்த்தி மற்றும் பெருமையை பெற்றிட தலைமைத்துவம் வழங்கிய முன்னாள் தளபதிகள், உன்னத சேவையாற்றிய ஓய்வு பெற்ற மற்றும் சேவையிலுள்ள சகல உறுப்பினர்களையும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தினத்தில் நன்றியுடன் நினைவு கூறுகின்றேன். இராணுவத்திற்கு கிடைக்கும் கௌரவத்தின் பூர்ண சொந்தகார்ரகளான உங்கள் அனைவரையும் இங்கு குறிப்பிட்டு கூறுவதோடு, இராணுவ உறுப்பினர்கள் தங்கள் கடமைகளை செவ்வனே நிறைவேற்றி பல்வேறு கஸ்டங்கள், இன்னல்களை தாங்கிக்கொண்டு ஒத்துழைப்பு வழங்கிய குடும்பத்தின் உறவுகள் அனைவருக்கும் எனது மனம் நிறைந்த நன்றியினை தெரிவிப்பது எனது கடமையாகும். மேலும் எமது தாய்நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார கஸ்டங்களுக்கு பொருமையாக முகம்கொடுத்துக் கொண்டு தனது வழங்கப்படும் கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் உங்கள் அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுக்களை தெரிவித்துகொள்கின்றேன்.

அன்றும் இலங்கை இராணுவத்திற்கு காணப்பட்ட பாரதுரமான மற்றும் சவால்மிக்க பொறுப்பான பிரிவினைவாத பயங்கரவாத்தினை தோற்கடிப்பதாகும். உலகின் கொடுரமான பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக போரிட்டு வெற்றியுடன் நிறைவு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து போர் வீரர்களை இந்த விஷேடமான ஆண்டு நிறைவில் நினைவு கூறுவது எனது தலையாய கடமையாகும். அத்தோடு போருக்கு பிந்திய காலாப்பகுதியில் மீள்குடியேற்றம், அப்பிரதேசத்தை கட்டியெழுப்புதல் என்பவற்றிக்காக இலங்கை இராணுவம் பெரும் பங்களிப்பை வழங்கியமை இங்கு நினைவுபடுத்த வேண்டிய விடயமாகும். தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கடமைக்கு மேலதிகமாக இயற்கை அனர்த்தங்கள், கொவிட் போன்ற நோய்பரவல் காலங்களிலும் ஏனைய இக்கட்டான சூழ்நிலைகளில் வினைதிறனாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு தேசத்திற்கான கடமையை நிறைவேற்றியமை மக்கள் மத்தியில் என்றும் நிலைத்திருக்கும் என்பது நிச்சயம்.

நாட்டின் பொருளாதாரம், சமூக கலாசாரம் அடிப்படையில் அபிவிருத்தி, அமைதி மற்றும் ஐக்கியத்திற்கான பயணத்தில் பலத்தை வழங்கிய அர்பணிப்புடன் செயற்பட்டு நம் நாட்டின் அபிவிருத்திற்கு தோள் கொடுத்து விளையாட்டு மற்றும் விவசாயத்துறைகளை கட்டியெழுப்ப உச்ச ஒத்துழைப்பை வழங்கியமையை ஞாபகபடுத்தல் அவசியமானது. அத்தோடு போர் அனுவங்களை கொண்டுள்ள தொழிற்துறை இராணுவமாக ஐ.நா அமைதிகாக்கும் பணிகளின் ஊடாக உலக அமைதியை நிலைநாட்ட அர்பணிப்புக்களை வழங்கி உலகலாவிய பாராட்டுகளை பெற்றுள்ளமையை இங்கு பெருமையுடன் ஞாபகப்படுத்துகின்றேன். விஷேடமாக 2004ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை 20000க்கும் அதிக படையின் அமைதி காக்கும் பணிகளுக்காக எங்களால் பணியமர்த்தப்படுள்ளதோடு அதனுடாக பெருமளவான அந்நிய செலாவணி நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பெருமை மிகு வரலாற்றை கொணடுள்ள இலங்கை இராணுவத்தின் அபிமானம் மற்றும் வினைத்திறனை மேலும் கொண்டு செல்ல நோக்கம் இருத்தல் வேண்டும். அதற்கான திட்டம் மற்றும் கொள்கை மீது நமது கவனம் இருத்தல் வேண்டும் எதிர்கால சவால்கள் மற்றும் போர் உபகரணங்கள் போரோடு சம்பந்தமில்ல உபகரணங்களை நவீன மயப்படுத்தல், உயர் தொழிநூட்ப முறைமைகள் மற்று புதிய எண்ணக்கருக்களுடன் இராணுவம் தொழிற்படுவதற்கு வலுப்படுத்தல் எமது முதன்மை செயற்பாடாகும். அத்துடன் தேசத்தின் பாதுகாப்பிற்கு காணப்படும் அச்சுறுத்தல்களை இணங்கண்டு அதற்கு சரியான தீர்வை வழங்குவதன் ஊடாக அச்சுறுத்தல்களை முறியடித்தல் எமது பிரதான கடமையாகும். இங்கு அனைத்து நிலையினரின் தொழிலாண்மையினை விருத்தி செய்தல் மற்றும் எதிர்காலத்திற்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க ஆயத்தப்படுத்தல் கட்டாயமாகும் என்பதோடு கடந்த வருடங்கலில் இராணுவ மூலதர்மத்தை அடிப்படையாக கொண்டு பல வெளியீடுகளை வெளியிடுதல், புதிய பயிற்சி திட்டங்களை அறிமுகம் செய்தல் மற்றும் போர்யுத்திகளை நவீனமயமாக்குதல் அதற்கான படிமுறைகளாகும்.

கடந்த 75 ஆண்டு காலாத்தை திரும்பி பார்கையில் இராணுவ உறுப்பினர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள சேவைகளில் முன்னேற்றத்தை காணக்கூடியதாக உள்ளது. எதிர்காலத்திலும் அதனை அவ்வகையில் கொண்டு செல்லவும் தேவை ஏற்படின் விரிவுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். விஷேடமாக தாய்நாட்டிகாக உயிர்தியாகம் செய்த போரினால் முழுமையாக ஊனமுற்ற ஓய்வு பெற்ற படையினர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன்புரி திட்டங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

பெருமை 75 வது ஆண்டு நிறைவு கொண்டாடும் இந்த வேளையில் இலங்கை இராணுவம் பெற்றுள்ள வெற்றிகளை தொடர்ந்து கொண்டு செல்ல விஷேட கடமையினை மேற்கொள்ளல் எமது கடமையாகும். அதற்காக “தொழில் நிபுணத்துவம் நம்பிக்கை மற்றும் கௌரவம் என்பனவூடனான வெற்றி இராணுவம்” எனும் நோக்க கூற்றுடன் அனைவரும் செயற்படல் வேண்டும். மேலும் நாம் அனைவரும் ஓற்றுமையாக இந் நோக்கத்தினை அடைய தொழிற்படுகையில் வரும் சவால்களை எதிர்கொள்ளவும் இராணுவத்தின் அபிமானத்தை உயர்த்தவும் பலம்கிட்டும் என நான் மீண்டும் ஞாபகமூட்டுகின்றேன்.

வீரமிகு படையினரே அரச பாதுகாவலரான இலங்கை இராணுவத்தின் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை காப்பது எமது கடமையாகும். அத்தோடு தங்களுக்கு வழங்கப்படும் பொறுப்புக்கள், கடமைகளை அரசியலமைபிற்கு அமைவாகவும் அரசிற்கு சார்பாகவும் நிறைவேற்றல் வேண்டும். மேலும் சேவையிலுள்ள சகல அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் சேவையாளர்கள் அனைவரதும் குடும்ப உறுப்பினர்கள், அன்பான துணைவியர்கள், பாசமிகு பிள்ளைகள், அனைவருக்கும் 75 வது ஆண்டு நிறைவிற்கான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அனைவரும் வெற்றிகரமான எதிர்காலம் கிட்ட பிராத்திக்கின்றேன்.