புதிய நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு ஆறு வாரங்களே இருக்கின்ற நிலையில் மக்களின் குரலாக புதிய கட்சி ஐக்கிய ஜனநாயகக் குரல் உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சரான ரஞ்சன் ராமநாயக்க செயற்படுவதோடு, தேசிய அமைப்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் இக்கட்சியின் உருவாக்கத்திற்கு மக்களே உத்வேகம் அளித்திருப்பதாக அக்கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.