தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பத் திகதி நீடிப்பு!

2024 பாராளுமன்றத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றவர்களுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடையவிருந்த போதிலும், அஞ்சலில் ஏற்படக்கூடிய தாமதங்களையும் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, அஞ்சல் மூலம் வாக்களிக்க எதிர்பார்த்திருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதியன்று அதாவது, ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் அவை உரிய மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு கிடைத்திருத்தல் வேண்டும்.

எக்காரணம் கொண்டும் இத்திகதி மேலும் நீடிக்கப்பட மாட்டாது என்றும் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..