பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் சட்டதரணி பாரத் அருள்சாமி போட்டியிடுகின்றார் என கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று (08) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியாலளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், அவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.