இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கண்டி மாவட்டத்திற்கான அமைப்பாளராக பாலகிருஸ்ணன் பிரசாத் குமார் நேற்று (08) இ.தொ.கா சௌமியபவனில் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் தனது நியமனத்தை பெற்றுக்கொண்டார்.
இது குறித்து இ.தொ.கா அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பிரசாத் குமார் நாவலப்பிட்டிய கதிரேசன் கல்லூரி, கண்டி புனித அந்தோனியார் கல்லூரி ஆகிவற்றின் பழைய மாணவரும், யாழ். பல்கலைக்கழகத்தின் இணை மருத்துவபீடத்தின் பட்டதாரியும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் வணிக முகாமைத்துவ கற்கை நெறியின் முதுமானிய பட்டத்தையும் பெற்றுக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையக பாடசாலைகளின் கல்வி அபிவிருத்திக்காக கணித, விஞ்ஞானம் போன்ற பாடங்களை மாணவர்களின் வளர்ச்சிக்காக வழிகாட்டியாக அமைந்தவர் என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.
கண்டி மாவட்டத்தில் நிலவிய மேற்படியான அமைப்பாளர் பதவியின் வெற்றிடத்தினை பூர்த்திசெய்வதற்காக கடந்த 24 மணித்தியாலத்திற்குள் இ.தொ.கா தலைமைகளால் பூர்த்தி செய்துள்ளமையும் இங்கு சுட்டிக் காட்டக்கூடியதாக அமைந்துள்ளது.