இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உயர்மட்ட குழு கூட்டம் இ.தொ.காவின் தலைமை செயலகமான சௌமியபவனில் இன்று இடம்பெற்றது.
இவ்வுயர்மட்ட குழு கூட்டத்தின் போது நடைபெறவுள்ள போது தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்திலும் ஏனைய மாவட்டத்தில் சிலிண்டர் சின்னத்திலும் இ.தொ.கா போட்டியிட தீர்மானம் எட்டப்பட்டது.இக்கூட்டத்தில் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானால் இ.தொ.காவின் பிரச்சார செயலாளராக கணபதி கனகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது தேர்தலில் நுவரெலியா மற்றும் ஏனைய மாவட்டங்களில் பிரச்சாரத்தில் வியூகம் வகுத்தல் , தேர்தல் பிரச்சாரத்தின் நடைமுறைகளை ஆராய்தல் போன்ற விடயங்களுக்கான முழு பொறுப்பும் கணபதி கனகராஜ்க்கு வழங்கப்பட்டுள்ளது .
பொது தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் கட்சியின் செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன்,சக்திவேல் ஆகியோர் போட்டியிடவுள்ள நிலையில், கணபதி கனகராஜ்க்கு யானை சின்னத்தில் தேசிய பட்டியல் ஊடாக வாய்ப்பு வழங்க கட்சி தீர்மானித்துள்ளது.