பசறை தமிழ் தேசிய பாடசாலையின் ஆரம்பப்பிரிவு மூன்றாம் நான்காம் ஐந்தாம் தர மாணவர்களுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் K.M.C.பிரபாகரன் தெரிவித்தார்.
பாடசாலையில் குறித்த கட்டிடத்தில் கற்பிக்கப்படும் வகுப்பின் மேற் கூரையில் பாரிய அளவிலான குளவி கூடு ஒன்று காணப்படுவதன் காரணத்தினால் முன்னெச்சரிக்கையாக மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அதிபர் மேலும் தெரிவித்தார்.
நேற்றிலிருந்து காணப்படும் குறித்த குளவி கூடு சம்பந்தமாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் குறித்த குளவி கூட்டினை அவ்விடத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையை உரிய அதிகாரிகள் இன்றைய தினம் மேற்கொள்வார்கள் என நம்பிக்கை உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.