தர்மமுழக்கம் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலய பாடசாலை களுக்கிடையிலான 7வது தர்மமுழக்கம் துடுப்பாட்ட தொடர் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி தர்மபுரம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
தர்மபுரம் மத்திய கல்லூரி அணி 170 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முழங்காவில் மகா வித்தியாலய அணியை வீழ்த்தி 7வது தர்மமுழக்கத்தை தனதாக்கிக்கொண்டது.
தர்மபுரம் மத்திய கல்லூரி அணி 1வது இனிங்சில் 126ஓட்டங்களையும், முழங்காவில் மகா வித்தியாலய அணியினர் 1வது இனிங்சில் 52ஓட்டங்களைப்பெற்றனர்.
தர்மபுரம் மத்திய கல்லூரி அணி இரண்டாவது இனிங்சில் 170 ஓட்டங்களையும் பெற்றனர்.
தர்மபுரம் மத்திய கல்லூரி 244 ஓட்டங்களால் முன்னிலை வகிக்க, 245ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் பதிலுக்கு இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய முழங்காவில் மகா வித்தியாலய அணி 52.02 பந்து பரிமாற்றங்களில் சகல இழக்குகளையும் இழந்து 74ஓட்டங்கள் பெற்ற நிலையில் 170 ஓட்டங்களால் தர்மபுரம் மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்றது.
போட்டியின் ஆட்டநாயகனாக தர்மபுரம் மத்திய கல்லூரி R.தமிழ்வாணனும், சிறந்த துடுப்பாட்ட வீரராக தர்மபுரம் மத்திய கல்லூரி K.ரொபின்சனும், சிறந்த பந்து வீச்சாளராக தர்மபுரம் மத்திய கல்லூரி Y.டிசாந்தனும், சிறந்த களத்தடுப்பாளராக தர்மபுரம் மத்திய கல்லூரி S.துசாந்தும், சகலதுறை வீரராக தர்மபுரம் மத்திய கல்லூரி R.தமிழ்வாணன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும் இதுவரை நடைபெற்ற ஏழு போட்டிகளில் தர்மபுரம் மத்திய கல்லூரி ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பதுடன் ஒரு போட்டியில் முழங்காவில் மகா வித்தியாலயம் ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றிருக்கிறது.
ஒரு போட்டி சமநிலையில் நிறைவடைந்திருக்கிறது.