எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் திருகோணமலை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று (04) ஆரம்பமானது.
பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது நேற்று (04) காலை 08.30 மணிக்கு ஆரம்பமாகி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை அலுவலக நாட்களில் நடைபெறும்.