தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மாநாட்டுக்கு தொண்டர்களை அழைத்து விடுக்கப்பட்ட கடிதத்தில், அனைவரும் ஒன்றுகூடும் போது, கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி. சாலை பகுதியில் எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான பந்தல் கால் நடுதல் இன்று (4) வெள்ளிக்கிழமை அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில், கட்சித் தொண்டர்களுக்கு நடிகர் விஜய், முதல் கடிதத்தை எழுதியுள்ளார்.