தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (73), தற்போது ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்காக விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ரஜினி, கடந்த சில நாட்களுக்கு முன்புதான் சென்னை திரும்பினார். இந்நிலையில் செப்.30-ம் தேதி நள்ளிரவு உடல்நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அடிவயிறு பகுதியில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எனக் கூறப்பட்டது.
தொடர்ந்து, இதயத்தில் இருந்து பிரியும் இரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததால் TRANSCATHETER முறையில் ஸ்டென்ட் பொருத்தி வீக்கத்தை நிறுத்தியதாகவும், ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது சீராகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் என்று அப்போலோ மருத்துவமனை அறிவித்தது.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சிகிச்சை முடிந்த நிலையில் நள்ளிரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.
நான்கு நாட்களுக்கு பிறகு ரஜினிகாந்த் வீடு திரும்பினார். இரண்டு வார காலத்துக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாகவும், அதன்படி வீட்டிலேயே ஓய்வு எடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.