உலக சிறுவர் தின கொண்டாட்டங்களில் இராமநாதன் இ.ம.கல்லூரி மாணவர்கள்..!!!

ஒக்டோபர் 1 ஆம் திகதி உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, கல்வி அமைச்சு மற்றும் ஸ்ரீலங்கா போலீஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் ஏற்பாட்டில் களனி நாகானந்தா சர்வதேச பௌத்த கல்வி நிறுவனத்தில் சிறுவர் தின கொண்டாட நிகழ்வுகள் இடம்பெற்றன.

“தவறவிடப்பட்ட பாடம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கல்வி அமைச்சின் அதிகாரிகள், ஸ்ரீலங்கா போலீஸின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் என பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதில் சிறப்பு நிகழ்வாக “தவறவிடப்பட்ட பாடம்” எனும் தொனிப்பொருளிலான பாடல் வெளியீடு இடம்பெற்றதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.


பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவியரின் பரதநாட்டிய ஆடல் நிகழ்ச்சி அனைவரையும் கவரும் விதமாக சிறப்பாக அமைந்திருந்தது. ஆடை அமைப்பு மற்றும் அவர்களது ஆடல் நளினங்கள் வந்திருந்த பார்வையாளர்களை ஈர்க்கும் விதத்தில் இருந்ததோடு அனைவரது பாராட்டுகளையும் பெற்றது. இந்நடன நிகழ்வை ஆசிரியை திருமதி.விஜயபாமா கணேஷ் நெறியாள்கை செய்திருந்தார்.

அதேநேரம் கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த உலக சிறுவர் தின நிகழ்ச்சிகளை தமிழ் மொழியில் முழுமையாக தொகுத்து வழங்கியிருந்தார் செல்வி. ஹரிநிஷா ஸ்ரீ பிருந்தன். இவர் இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் 9 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவியாவார்.


இந்நிகழ்வுகள் அனைத்தும் சுயாதீன தொலைக்காட்சி சேவையில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.