நேற்று மாலை 6.30 மணியளவில் சாமிமலை பகுதிக்கு வந்து சென்ற சிறிய ரக கார் ஒன்று, ஹட்டன் வனராஜா கிறித்தவ ஆலயம் அமைந்துள்ள பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் ஐம்பது அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் ஏற்பட்ட பணி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு, 3 1/2 வயது குழந்தை உட்பட மூவர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என ஹட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் இன்னும் சற்று கீழ் நோக்கி கார் சென்று இருப்பின் காசல்ரீ நீர் தேக்கத்தில் விழுந்து இருக்கும் எனவும் தெய்வாதீனமாக அவ்வாறு இடம்பெறவில்லை என்று கூறினார்.
இந்த விபத்து தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என அந்த அதிகாரி தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர்.