முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, திலித் ஜயவீர தலைமையிலான மவ்பிம ஜனதாக கட்சியில் இணைந்துள்ளார்.
அக்கட்சியின் தவிசாளர் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், அக்கட்சியின் உப தவிசாளர் பதவிக்காக முன்னாள் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜயதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.