பது/ கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் 2024-2025 ம் ஆண்டிற்கான மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு (30/09/2024 ) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வு பாடசாலையின் அதிபர் திரு S இராஜேந்திரா பிரதி அதிபர் திரு S.தியாகராஜ் பிரதி அதிபர் N. தர்ஷினி ஜெயபிரகாஷ் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் கல்வி சாரா ஊழியர்கள் பெற்றோர் நலன் விரும்பிகள் இணைந்து சிறப்புற நிகழ்தியுள்ளதுடன் மாணவத் தலைவர்களையும் பாடசாலை மாணவர்களையும் ஊக்குவிப்பதற்கான ஆக்கபூர்வ நிகழ்வுகளும் இந்நிகழ்வில் இடம்பெற்றன.
மாணவர் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மற்றும் நேர்முக பரீட்சை ஆகியன பாடசாலையின் மாணவர் தலைவர் தெரிவுக் குழு ஆசிரியர்களால் கடந்த ஆகஸ்டு மாதம் 16 ம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ராமு தனராஜா