பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் ஒருநாள் போட்டி தலைமை பதவியில் இருந்து விலகியுள்ளார்.
X தளத்தில் அவர் பதிவிட்டுள்ள குறிப்பில், நேற்றிரவு தான் ODI தலைமை பதவியில் இருந்து இராஜினாமா செய்ததாக கூறினார்.
முன்னதாக 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்தில் மோசமான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணித் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
அவருக்குப் பிறகு வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி அணியின் தலைவராக இருந்தார். ஆனால் மார்ச் 2024 இல் பாபர் மீண்டும் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இருப்பினும், 2024 டி20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் நாக் அவுட் ஆனதால், பாகிஸ்தான் அணித் தலைவராக அவர் இரண்டாவது முறை தோல்வியடைந்தார்.
கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கடும் அழுத்தத்தில் உள்ளது, அதற்கு முக்கிய காரணம் பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததுதான் என்றும் கூறப்படுகின்றது.