இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, கான்பூரில் 2 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியது. இதில் முதலில் ஆடிய வங்கதேச அணி, முதல் நாளன்று 107 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனை தொடர்ந்து 2 மற்றும் 3 ஆவது நாள் ஆட்டமும் மழையால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், 4ஆம் நாள் வங்கதேச அணி 288 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. பின்னர், பேட்டிங் ஆடிய இந்திய அணி, அதிரடியாக விளையாடி 34 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.
தொடர்ந்து, தனது 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி 47 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணிக்கு 95 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
17.2 ஓவர்களில் இந்திய அணி 95 ரன்கள் வெற்றி இலக்கை எளிதாக எட்டியது.
இந்த அபார வெற்றியின் மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2 – 0 என கைப்பற்றியது