விமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

விமல் வீரவங்சவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் சையத் அல்ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, கொழும்பு தும்முல்லையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு முன்பாக தடுத்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச, வீர குமார திசாநாயக்க, மொஹமட் முஸம்மில், ரோஜர் செனவிரத்ன உள்ளிட்டோருக்கு எதிராக குருந்துவத்தை பொலிஸார் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சியங்களின் விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி நடத்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு திங்கட்கிழமை (30) கொழும்பு பிரதம நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.