இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.
அதற்கமைய, சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த கிரிஸ் சில்வர்வூட் ஐசிசி T20 உலகக்கிண்ணத்துடன் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, சனத் ஜயசூரிய இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார்.
சனத் ஜயசூரியவின் தலைமை பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதோடு, இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியொன்றிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.
தற்போது நடைபெற்று முடிந்த நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரையும் கைப்பற்றி வலுவான அணியாக மாறியுள்ளது.