396 தேசிய பாடசாலை அதிபர்களுடன் பிரதமர் சந்திப்பு..!!


கொழும்பு ஆனந்தா கல்லூரியில் 396 தேசிய பாடசாலைகளின் அதிபர்கள் பங்குபற்றிய விசேட செயலமர்வொன்று நேற்று (28) இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டார்.


அரசியல்மயமயப்பட்டுள்ள கல்விமுறைமையை அதிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று பிரதமர் இதன் போது கூறினார்.


இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
தற்போதுள்ள கல்வி முறையில் பிள்ளைகள், பெற்றோர்கள், மற்றும் சமூகம் திருப்தி அடைகின்றனரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. திட்டமிட்டபடி பரீட்சையை நடத்த முடியுமா? பரீட்சை பெறுபேறுகள் பற்றி நீங்கள் நம்பிக்கையோடு இருக்க முடியுமா? கல்வித் துறையில் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் குறித்து நீங்கள் நம்பிக்கையுடன் இருக்க முடியுமா? பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கும் முறையில் சமுதாயம் நம்பிக்கை வைக்க முடியுமா? நம்பிக்கையை இழக்கும் வகையில் இந்த செயல்முறை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. இது அரசியலாகிவிட்டது என்று அவர் குறிப்பிட்டார்.


இந்த நிகழ்வில் கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, தேசிய பாடசாலை பணிப்பாளர் திருமதி ஹசினி தலகல உட்பட கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.