GT4 ஐரோப்பியன் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க துபாயில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நடிகர் அஜித்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவருக்கு உலகளவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
நடிகர் அஜித் சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார்கள் மீது அலாதியான காதல் கொண்டவர். அதிலும் கார் மற்றும் பைக் ரேஸில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அஜித், சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னரே பைக் ரேஸில் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளார்.
2000-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை மிகுந்த ஈடுபாட்டுடன் கார் பந்தயத்தில் பங்கேற்று வந்த அஜித் குமார், F3 போன்ற கார் பந்தயங்களில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக எந்த ஒரு கார் பந்தயத்தில் பங்கேற்காமல் இருந்தார் நடிகர் அஜித்.
ஆனாலும் பைக்கில் World Tour சென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும், பைக்கில் நண்பர்களுடன் சுற்று பயணம் மேற்கொள்ளும் நடிகர் அஜித்தின் புகைப்படம் இணையத்தில் அடிக்கடி வைரலாவதும் உண்டு.
கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அஜித் தற்போது மீண்டும் கார் பந்தயத்தில் களமிறங்கவுள்ளார். பிரிட்டனில் நடைபெறும் GT4 ஐரோப்பியன் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவுள்ளார்.
தற்போது துபாயில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார் அஜித். பாதுகாப்பு உபகரணங்களுடன் அஜித் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.