–குருசாமியின் ராஜினாமாவை அடுத்து அரசியல் குழு தீர்மானம்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் பொது செயலாளர் பதவியில் இருந்த கே.ரி. குருசாமி, கட்சி தலைவர் மனோ கணேசனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தான் கட்சி மற்றும் கூட்டணி பதவிகளில் இருந்து சுயவிருப்புடன் ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று கொழும்பில் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடிய ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் குழு, இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, காலியான பொது செயலாளர் பதவிக்கு முருகேசு பரணிதரனை ஏகமனதாக நியமித்தது.
முருகேசு பரணிதரன் கட்சியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் மற்றும் பிரச்சார செயலாளர் ஆகிய பதவிகளை வகிக்கும் அதேவேளை ஜனநாயக மக்கள் முன்னணியினதும், தமிழ் முற்போக்கு கூட்டணியினதும் அரசியல் குழு உறுப்பினராகவும் பதவி வகின்றார்.
மேலும் அரசியல் குழுவில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில், ஞாயிற்றுகிழமை 29ம் திகதி கொழும்பில் நடைபெற உள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழுவில் கலந்து பேசி அங்கே எடுக்கப்படும் முடிவுகளுக்கு அமைய செயற்படுவது எனவும் தீர்மானிக்கபட்டது.