நேற்றையதினம் (24) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்ட அமைச்சர் விஜித ஹேரத், கொழும்பு 05 பொல்ஹேன்கொடவில் உள்ள ஊடக அமைச்சில் தனது பணிகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
சர்வமத ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் உத்தியோகபூர்வ கடிதத்தில் கையொப்பமிட்டு தனது கடமைகளை ஆரம்பித்தார்.
இந்த நிகழ்வில் புத்தசாசனம், சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.