புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்வு..!

பாராளுமன்றத் தேர்தல் நவம்பர் 14

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களினால் அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையின் கீழ் அவருக்கு உரித்தாக்கப்பட்ட தத்துவங்களின் பயனைக் கொண்டும், 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் ஏற்பாடுகளைப் பின்பற்றியும், 2024 செப்டெம்பர் 24ஆம் திகதி நள்ளிரவிலிருந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, 2024 நவம்பர் 21 ஆம் திகதியன்று பாராளுமன்றம் கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2024.09.24 ஆம் திகதிய 2403/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, 2024.11.14 ஆம் திகதி பாராளுமன்ற பொதுத் தேர்தலை நடாத்துவதற்கும், 2024.10.04 ஆம் திகதி முதல் 2024.10.11 ஆம் திகதி வரையான காலப் பகுதி வேட்புமனுப் பத்திரம் சமர்ப்பிப்பதற்கான காலப்பகுதியாகவும் குறித்துரைக்கப்பட்டுள்ளது.