ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்..!

ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் நஜித் இந்திக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை ரன்ன மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான வைத்தியர் நஜித் இந்திக்க, கொழும்பு மருத்துவ பீடத்தில் தனது மருத்துவ பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

கடந்த 05 வருடங்களில் பல அரச வைத்தியசாலைகளில் வைத்தியராகவும் வைத்திய அதிகாரியாகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

வைத்தியர் நஜித் இந்திக்க பல்கலைக்கழக மாணவர் செயற்பாட்டாளர் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்.

https://web.facebook.com/VaibzNews