புதிய பிரதமர் ஹரிணிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“பிரதமராக உங்கள் நியமனம் இலங்கைப் பெண்களை அவர்களின் திறமை, வலிமை மற்றும் தொலைநோக்கு பார்வையுடன் முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன். ” என தெரிவித்துள்ளார்.