நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார்.
அவரது அதிகாரப்பூர்வ X கணக்கில் இது குறித்த பதிவொன்றினை இட்டிருந்தார்..
இதன்படி, 123,888 மெற்றிக் டொன் டீசலும், 13,627 மெற்றிக் டொன் சுப்பர் டீசலும் கையிருப்பாக உள்ளன.
நாட்டில் 90,972 மெட்ரிக் டொன் ஒக்டேன் 92 வகை பெட்ரோலும், 18,729 மெட்ரிக் டொன் ஒக்டேன் 95 வகை பெட்ரோலும் உள்ளன.
நாட்டில் 30,295 மெற்றிக் டொன் விமான எரிபொருள் இருப்பதாக காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இதேவேளை, தனது உத்தியோகபூர்வ காரையும் அமைச்சு அலுவலகத்தையும் கையளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.