மடூல்சீமை பகுதியில் இருந்து பசறை நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று பசறை மடூல்சீமை வீதியில் 7 ம் கட்டை பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 மீற்றர் பள்ளத்தில் விழுந்ததில் சாரதி உட்பட நால்வர் காயமடைந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் 41,38 வயதுடைய கணவன் மனைவியும் , மேற்குறிப்பிட்ட தம்பதிகளின் மகள் 17 வயதுடைய பெண்ணும் , 56 வயதுடைய சாரதியுமே இவ்வாறு பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நால்வரையும் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பசறை வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத போதிலும் மேலதிக விசாரணைகளை மடூல்சீமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.