சர்வஜன ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர இன்று (21) மிரிஹான ஸ்ரீ சந்திரராம விகாரையில் அமைந்திருந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்களித்தார்.
இதன் பின்னர் கருத்து தெரிவித்த அவர், “மகிழ்ச்சியான தேசத்தை” உருவாக்குவதற்கு 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆணையை வழங்குமாறு திலித் ஜயவீர கோரினார்.
“இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர், முக்கியமான ஜனாதிபதித் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த மக்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.
பாரம்பரிய அரசியல் இன்னும் வேரூன்றியிருக்கும் நேரத்தில், இந்த நிலைக்கு நான் ஒரு பெரிய சவாலை விடுத்துள்ளேன் என்று நம்புகிறேன்.
இதன் மூலம், இந்நாட்டு மக்கள் விரும்பும் வேறுபட்ட இலங்கையின் தொடக்கத்தை அல்லது மூன்றாம் உலகத்திலிருந்து முதல் உலகத்திற்கான பயணத்தை எங்களால் ஆரம்பிக்க முடியும்” என்றார்.