தேசிய காங்கிரஸ்கட்சியின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் .அதாஉல்லா , அக்கரைப்பற்று அஸ்ஸிராஜ் மகாவித்தியாலயத்தில் வாக்களித்தார்.
இலங்கையின் 9 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு தற்போது இடம்பெற்றுவருகிறது.
காலை 7 மணிமுதல் நாட்டின் தலைவரைத் தேர்வு செய்வதற்காக தமது வாக்குகளைப் மக்கள் பதிவு செய்ததை அவதானிக்க முடிந்தது. அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேசங்களிலும் வாக்களிப்பு மிக சுமுகமாக இடம்பெற்றது.
மேலும் அட்டாளச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 31 வாக்களிப்பு நிலையங்களில் சுமுகமான முறையில் வாக்களிப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.