திகாமடுல்ல மாவட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் விளக்கம். . .
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான 2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இலக்கம் 13 திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை,கல்முனை, சம்மாந்துறை மற்றும் பொத்துவில் ஆகிய 4 பிரிவுகளாக தேர்தல் இடம்பெறுகின்றது. 555,432 பதிவு செய்யப்பட்ட மற்றும் 26,778 தபால் மூலமும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் தற்போது 99.98 தபால் மூல வாக்குகளை அளிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட செயலாளருமான சிந்தக அபேவிக்கிரம ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போது குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்:
திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறையில் 188,222, கல்முனையில் 88,830, சம்மாந்துறையில் 99,727 மற்றும் பொத்துவிலில் 184,653 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்
அவர்களுக்காக அம்பாறையில் 184, கல்முனையில் 74, சம்மாந்துறையில்; 93 மற்றும் பொத்துவிலில் 177 வாக்களிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
முழு திகாமடுல்ல மாவட்டத்தையும் உள்ளடக்கியதாக 528 வாக்களிப்பிற்கான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினர் 6,500 பாதுகாப்புக் கடமைகளுக்காகவும் 8,145 அரசாங்க ஊழியர்களும் பல்வேறு பதவிகளில் இருந்தும் தேர்தல் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் கடமைகளுக்கான மத்திய நிலையமாக அம்பாறை மாவட்ட செயலகம் செயற்படுவதுடன் உப அலுவலகம் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று (20) வரை திகாமடுல்ல மாவட்டத்தில் 313 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவை சாதாரண முறைப்பாடுகளாகவும் 303 முறைப்பாடுகள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டதுடன், 26 முறைப்பாடுகள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.