2024 ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) நாடு முழுவதும் இடம்பெற்று வருகிறது.
மன்னார் மாவட்டத்தில் காலை 7 மணி முதல் முதல் மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களித்து வருகின்றனர்.
மன்னார் மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை 90607 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
வாக்களிப்பு சுமூகமான முறையில் இடம்பெற்றுவருவதுடன், தேர்தல் கடமைகளில் அரச அதிகாரிகள், பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுவருகின்றதை அவதானிக்க முடிகிறது.