இன்றைய தினம் (21) இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பானது காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
அந்தவகையில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு.பி.ஏ. சரத்சந்ர அவர்கள் தற்சமயம் ஊடக சந்திப்பில் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 128585 மற்றும் வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை 152 ஆகும்.
மேலும் இன்று காலை 10.00 வரையிலான வவுனியா மாவட்டத்தில் வாக்குப்பதிவுகளின் நிலவரப்படி 30% சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.பி.ஏ. சரத்சந்ர அவர்கள் தெரிவித்தார்