இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் இன்று(21) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
இதன்படி கிளிநொச்சி மாவட்டத்தில் இன்றைய தினம் காலை 10.00 மணிவரை 27.14 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது.
இதுவரை வாக்களிப்பு சுமூகமான முறையில் இடம்பெற்றுவருவதுடன், தேர்தல் கடமைகளில் ஆயுதம் தாங்கிய பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுவருகின்றதை அவதானிக்க முடிகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இம்முறை 100 907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இத்தேர்தல் பணியில் கிளிநொச்சி மாவட்டத்தில் 1,734 அரச உத்தியோகத்தர்கள், 400 பொலிசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.