ஜனநாயகத்தை பாதுகாத்து சமாதானத்துடனும் நட்புடனும் ஒற்றுமையுடனும் செயற்படுவது அனைவரினதும் கடமையும் பொறுப்புமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ராஜகிரிய கொடுவேகொட, விவேகராம புராண விகாரை, சந்திரலோக தஹம் பாடசாலை கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் வைத்து வாக்களித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.