2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்புஇன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணிக்கு நிறைவடைய உள்ளது.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்குத் தகுதி பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 17,140,354 ஆகவும், தபால்மூல வாக்காளர்களின் எண்ணிக்கை 712,318 ஆகவும் உள்ளது.


அத்துடன், நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் உள்ளதுடன், 1,713 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படவும் உள்ளன.