புது பிசினஸ்.. டிக்கெட்9 உடன் இணைந்த நயன்தாரா..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சைமா விருது விழாவுக்காக சமீபத்தில் குடும்பத்துடன் துபாய் சென்ற இருவரும் பிறந்தநாளை கொண்டாடி விட்டு சென்னைக்கு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே ஏகப்பட்ட தொழில்களில் ஆர்வம் செலுத்தி வரும் நடிகை நயன்தாரா கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய தொழில் ஒன்றில் முதலீடு செய்துள்ளார்.

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘டிக்கெட் 9’ எனும் கலை நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விற்பனை செய்யும் நிறுவனத்தில் தான் நடிகை நயன்தாரா பல கோடிகளை முதலீடு செய்துள்ளார் என்கின்றனர். விக்னேஷ் சிவன் பிறந்தநாள்: 1985ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி சென்னையில் விக்னேஷ் சிவன் பிறந்தார்.

அவருடைய பிறந்த நாளை கூட்டினாலே 9 தான் வருகிறது. சிம்புவின் போடா போடி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் நயன்தாராவை வைத்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கும் போதே அவரை காதலிக்க ஆரம்பித்து நயன்தாராவின் அன்பை பெற்று திருமணமும் செய்துக் கொண்டார்.

2 மகன்கள்: நடிகை நயன்தாரா குழந்தைகளை பெற்றுக் கொள்ள முடியாத சூழலில் வாடகைத் தாய் மூலமாக 2 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். உயிர், உலகம் என வித்தியாசமாக பெயர் வைத்து தனது மகன்களை பாசத்துடன் வளர்த்து வரும் நயன்தாரா தொடர்ந்து தனது கணவருக்கு அனைத்து வகையிலும் உறுதுணையாக இருந்து வருகிறார்.

ஸ்கின்கேர் க்ரீம், ஃபெமி9 எனும் நாப்கின், சாய் வாலா எனும் டீ கடை, கேப் பிசினஸ் மற்றும் சில ரியல் எஸ்டேட் பிசினஸ் என நடிகை நயன்தாரா தனது கணவருடன் இணைந்து பல பிசினஸ்களை செய்து வருவதாக கூறுகின்றனர். ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரிப்பு பணிகளையும் நடத்தி வருகின்றனர். நயன்தாராவுக்கு சொந்தமாக பிரைவேட் ஜெட் இருப்பதாகவும், துபாயில் தனி வீடு இருப்பதாகவும் ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், கணவரின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய பிசினஸ் ஒன்றிலும் நயன்தாரா முதலீடு செய்துள்ளார். டிக்கெட் 9: கடந்த 2022ம் ஆண்டு யாழினி சண்முகம் மற்றும் சந்தோஷ் பிரேம்ராஜ் இணைந்து உருவாக்கிய டிக்கெட் 9 எனும் ஈவெண்ட் நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விற்பனை நிறுவனத்துடன் இணைந்துள்ளார் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் இணைவார் என தெரிந்து ஏற்கனவே தங்கள் நிறுவனத்துக்கு அவர்கள் டிக்கெட் 9 என பெயர் வைத்தார்களா? அல்லது அதில், 9 இருப்பதால் நயன்தாரா முதலீடு செய்ய முன் வந்திருக்கிறாரா என தெரியவில்லை.

இதுவரை நிகழ்ச்சிகளுக்கான டிக்கெட் விற்பனை செய்யும் நிறுவனமாக உள்ள டிக்கெட் 9ல் நயன்தாரா இணைந்துள்ள நிலையில், டிக்கெட் நியூ மற்றும் புக் மை ஷோ போல சினிமா டிக்கெட்டுகள் விற்பனை உள்ளிட்டவற்றிலும் அடியெடுத்து வைப்பார்களா? என்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர். சினிமாவை தாண்டி பல தொழில்களில் ஆக்டிவாக நயன்தாரா ஆர்வம் காட்டி வருவதை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.