தலவாக்கலை மடக்கும் புற – புதுக்காடு தோட்டத்தை சேர்ந்த ஒருவர் மரத்திலிருந்து தவறி வீழ்ந்து ஆண் பலி.
இவ்வாறு பலியானவர் கர்ப்பிணி தாயினும் ஒரு பிள்ளைகளின் தந்தை என்றும் 31 வயதுடைய நடராஜ் கணகேஸ்வரனாவார் .
பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கயிப்புகலை பிரதேசத்திலுள்ள உயரமான மரத்தில் ஏறி விறகு வெட்டிக் கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்து உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரனைகளை பூண்டு லோயா பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். உடலமானது சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மரணித்தவர் நாளாந்தம் விற்கு சேகரித்து அதனை விற்பனை செய்தே தனது குடும்பத்தை நடத்தி வந்ததாகவும் இன்று விறகு வெட்ட சென்ற வேளையில் மரத்தில் ஏறி விரகு வெட்டி கொண்டு இருந்த வேலையில் குளவி கொட்டுக்கு இலக்கிய மரத்தில் இருந்து கீழே விழுந்தது சம்பவ இடத்திலேயே உயிர் இழந்து உள்ளார்.
அவருடன் சேர்ந்து மேலும் ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்கிய நிலையில் மடக்கும்பர வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என தலவாக்கலை பொலிசார் தெரிவித்தனர்.
திடீர் மரண விசாரணை அதிகாரி வந்து பார்த்த பின்னர் உடலம் நுவரெலியா வைத்திய சாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்ல பட உள்ளது என தெரிவித்தனர்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்.