கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போதைய தேர்தல் நிலவரங்கள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் நேற்று (19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் :
கிளிநொச்சி மாவட்டத்தில் 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
இங்கு 100,907 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதுடன் 108 வாக்களிப்பு மற்றும் 8 வாக்கெண்ணல் நிலையங்களும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்து இதுவரை 11 தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இன்று (20) காலை வாக்குப் பெட்டிகளை எடுத்து செல்வதற்கு 40 பேருந்துகள் தயார்படுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்புக் கடமைகளுக்காக 400 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.